TNPSC Thervupettagam

உலக அமைதி பதக்கம்

June 9 , 2018 2265 days 649 0
  • எதிர்வரும் அமெரிக்க அதிபர் டொன்ல்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோருக்கிடையேயான மாநாட்டை நினைவு கூர்வதற்காகச் சிங்கப்பூர் உலக அமைதி பதக்கத்தை (World Peace medallion) வெளியிட்டுள்ளது.
  • இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பானது தற்சமயம் அமெரிக்காவின் அதிபராகவும், வடகொரியாவின் தலைவராகவும் உள்ளவர்களிடையே நடைபெறும் முதல் சந்திப்பாகும்.
  • இந்தப் பதக்கத்தில் அமைதியின் திருமறைச் சின்னங்களான (biblical symbol of peace) புறா மற்றும் ஆலிவ் கிளை ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் அதனோடு இரு நாடுகளின் தேசிய மலர்களான ரோஜா மற்றும் மேக்னோலியா (magnolia) மலர்களும் இடம் பெற்றுள்ளன.
  • 2015-ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாடானது கம்யூனிஸ்டுகளுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையிலான 1949ஆம் ஆண்டின் சிவில் போருக்குப் பிறகு முதன் முறையாக தைவான் நாட்டின் தலைவர்களுக்கும், சீனாவிற்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்