TNPSC Thervupettagam

உலக அரிசி விலைக் குறியீடு

August 10 , 2023 346 days 225 0
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அனைத்து அரிசி விலைக் குறியீடானது, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சராசரியாக 129.7 புள்ளிகளை எட்டியது.
  • இது 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை பதிவான மிக அதிகபட்ச அளவாக உள்ளது.
  • அதிகளவிலான அரிசித் தேவையானது, அரிசியின் விலை உயர்வுகளுக்கான முக்கிய காரணிகளாக உள்ளது.
  • அரிசி ஏற்றுமதிகளில் இந்திய அரசினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்பது இதற்கான கூடுதல் காரணியாகும்.
  • இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதி மேற்கொள்ளும் முக்கிய நாடுகளாகும்.
  • சீனா, பிலிப்பைன்ஸ், பெனின், செனகல், நைஜீரியா மற்றும் மலேசியா ஆகியவை அரிசி இறக்குமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • அமெரிக்கா, தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தியாவின் பாஸ்மதி வகை சாராத பச்சரிசி ஏற்றுமதிக்கான சில முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்