TNPSC Thervupettagam

உலக அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 19

June 21 , 2024 10 days 61 0
  • இது அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் மற்றும் நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய ஒரு பொதுவான அறிவையும் அதன் மீதான புரிதலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, அரிவாள் வடிவ உயிரணு சோகை நோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக அங்கீகரித்தது.
  • அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் என்பது ஹீமோகுளோபின் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படும் ஒரு மரபணு இரத்தக் கோளாறு ஆகும் என்ற நிலையில் இது அசாதாரண ஹீமோகுளோபின் S உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
  • இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கக் கூடிய கடினமான, பிறை வடிவ சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, " Hope Through Progress: Advancing Sickle Cell Care Globally" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்