TNPSC Thervupettagam

உலக அறிவுசார் சொத்துரிமை தினம் - ஏப்ரல் 26

May 2 , 2018 2398 days 1065 0
 
  • படைப்பாக்கம் (Innovation) மற்றும் புத்தாக்கத்தை (creativity) ஊக்குவிப்பதில் அறிவுசார் சொத்துரிமைகள் (காப்புரிமை, வர்த்தக குறியீடு, தொழிற் வடிவமைப்பு, பதிப்புரிமை - patents, trademarks, industrial designs, copyright) வகிக்கும் செயற்பாத்திரத்தின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஏப்ரல் 26-ஆம் தேதி உலக அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) கொண்டாடப்படுகின்றது.

  • 2018-ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் தினத்தின் கருப்பொருள் “மாற்றத்திற்கு ஆற்றல் அளித்தல், புத்தாக்கம் மற்றும் படைப்பாக்கத்தில் பெண்கள்” (Powering change: Women in innovation and creativity).
  • உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்தினால் (World Intellectual Property Organization - WIPO) 2010-ஆம் ஆண்டு உலக அறிவுசார் சொத்துரிமை தினம் தோற்றுவிக்கப்பட்டது.
  • உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்தை தோற்றுவித்த உடன்படிக்கை 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி அன்று செயல்பாட்டிற்கு வந்தததை குறிப்பதற்காக அத்தினத்தன்று அறிவுசார் சொத்துரிமை தினம் கொண்டாடப்படுகின்றது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்