ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 அன்று உலக அறிவுசார் சொத்துரிமை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியானது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் (World Intellectual Property Organization WIPO) 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பை அமைப்பதற்கான பிரகடனமானது நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தினமானது புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றாலை ஊக்குவித்தலில் அறிவுசார் சொத்துரிமையின் (காப்புரிமை, வணிகக் குறியீடு, தொழிலக அடையாளங்கள் மற்றும் பதிப்புரிமை) பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை எண்ணுகின்றது.
இந்த ஆண்டின் கருத்துருவானது, “தங்கத்தை எட்டுதல்” என்பதாகும்.