TNPSC Thervupettagam

உலக அறிவுசார் சொத்து குறிகாட்டிகள் அறிக்கை 2022

November 10 , 2023 380 days 310 0
  • இந்த அறிக்கையினை உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியர்களின் காப்புரிமை தாக்கல் 31.6% (உலகளவில் திடீர் உயர்வு) அதிகரித்துள்ள நிலையில், இது நாட்டின் மேம்பட்டு வரும் புத்தாக்கச் சூழல் அமைப்பை பிரதிபலிக்கிறது.
  • உலகெங்கிலும் உள்ள கண்டுபிடிப்பாளர்கள் 2022 ஆம் ஆண்டில் 3.46 மில்லியன் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.
  • முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 1.7% அதிகமாகும்.
  • இந்திய கண்டுபிடிப்பாளர்கள் முந்தைய ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் 15,495 கூடுதல் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.
  • இந்தியர்களின் காப்புரிமை விண்ணப்ப தாக்கல் எண்ணிக்கையானது தொடர்ந்து 11வது ஆண்டாக அதிகரித்துள்ளது.
  • சீனாவில் 2021 ஆம் ஆண்டினை விட 33,605 அதிக விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
  • உலகளவில் காப்புரிமை விண்ணப்ப தாக்கலில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான தாக்கல்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
  • மிக அதிக எண்ணிக்கையுடன் முன்னணியில் இடம் பெற்றுள்ள சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன.
  • உலகளாவிய மொத்த எண்ணிக்கையில் 2012 ஆம் ஆண்டில் 27.7% ஆக இருந்த சீனாவின் பங்கு 2022 ஆம் ஆண்டில் 46.8% ஆக உயர்ந்துள்ளது.
  • இதற்கு மாறாக, 23% ஆக இருந்த அமெரிக்காவின் பங்கு ஆனது கடந்த பத்து ஆண்டுகளில் 17.2% ஆக குறைந்துள்ளது.
  • அறிவுசார் சொத்துரிமை தாக்கல் நடவடிக்கையின் பெரும்பகுதி ஆசியாவில் மேற் கொள்ளப் படுகிற நிலையில், இது 2022 ஆம் ஆண்டில் உலகளாவியக் காப்புரிமை தாக்கல் நடவடிக்கையில் 67.9% ஆகும்.
  • உலக அளவிலான அறிவுசார் சொத்து உரிமை தாக்கல் நடவடிக்கையில் கிட்டத்தட்ட பாதி பங்கினை சீனா கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்