TNPSC Thervupettagam

உலக அல்சைமர் நோய் தினம் - செப்டம்பர் 21

September 23 , 2023 431 days 227 0
  • இந்தத் தினமானது அல்சைமர் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உலகளாவிய முன்னெடுப்பாகும்.
  • அல்சைமர் நோய் மற்றும் பிற வகை மறதி நோய்களைச் சுற்றியுள்ள தவறான தகவல்களை அகற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அல்சைமர் நோய் ஆனது மிகவும் பொதுவான மறதி நோய் (டிமென்ஷியா) வகை என்ற நிலையில் இது மறதி நோய்களில் 60 முதல் 70% பங்கினைக் கொண்டுள்ளது.
  • அல்சைமர் நோய் என்பது நினைவகம், சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றைப்  பாதிக்கின்ற ஒரு மூளைக் கோளாறு ஆகும்.
  • இந்த அறிகுறிகள் காலப்போக்கில் மோசமாகி, ஒருவரின் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை பாதிக்கத் தொடங்கும்.
  • இது பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பாதிக்கிறது.
  • சர்வதேச அல்சைமர் நோய் அமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நாள் 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று எடின்பர்க் நகரில் நிறுவப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Never Too Early, Never Too Late’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்