2022 ஆம் ஆண்டில் அதிக பண அனுப்பீடுகளைப் பதிவு செய்த முதல் நாடுகளைப் கொண்ட முதல் நாடாக இந்தியா வரலாறு படைத்துள்ளது.
இந்தியாவின் பண அனுப்பீடுகள் ஆனது கடந்த ஆண்டு 111 பில்லியன் டாலராக உயர்ந்து, மற்ற எல்லா நாடுகளையும் விஞ்சியது.
2010, 2015, 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பண அனுப்பீடுகளில் முதல் நாடாக இந்தியா உள்ளது.
மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளும் பண அனுப்பீடுகளில் முதல் ஐந்து இடங்களில் உள்ளதாக இந்த அறிக்கையானது எடுத்து உரைக்கிறது.
தெற்காசியப் பிராந்தியத்தில் கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காணப்படுவதால், உலகளவில் மிகப் பெரிய அளவிலான பண அனுப்பீடுகளைப் பெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள், உலகில் சர்வதேச அளவிலானப் பண அனுப்பீடுகளில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளன.