உலக அளவில் தாய் நாட்டிற்குப் பணம் அனுப்பும் செலவு என்பது உலக வங்கிக் குழுவால் வழங்கப்படும் ஒரு வளம் சார்ந்த அறிக்கையாகும்.
இது பணம் அனுப்பும் 48 நாடுகள் மற்றும் பணத்தைப் பெறும் 105 நாடுகள் ஆகியவற்றின் செலவினம் குறித்த தரவைத் தருகின்றது.
தற்போதைய அறிக்கையின்படி, கோவிட் – 19 நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, தாய் நாட்டிற்குப் அனுப்பப் படும் தொகையானது 2020 ஆம் ஆண்டில் (110 மில்லியன் அமெரிக்க டாலர்) 20% அளவிற்குக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில், தாய் நாட்டிற்குப் பணம் அனுப்புதல் ஆனது எப்பொழுதும் இல்லாத வகையில் 554 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவிற்குப் பணம் அனுப்புதல் ஆனது 23% என்ற அளவில், அதாவது 64 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டில் 83 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
தாய் நாட்டிற்குப் பணத்தை அனுப்பிப் பெறுதலில் உலகின் மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.
2019 ஆம் ஆண்டில், இந்தியா வெளிநாடுகளில் பணியாற்றும் தன் மக்களிடமிருந்து 83.1 பில்லியன் அமெரிக்க டாலரை தாய் நாட்டிற்கு அனுப்பும் பணமாகப் பெற்றுள்ளது. இது மொத்த உலகளாவிய பணம் அனுப்புதலில் 12% ஆகும்.