புயூரிட்டோ ரிக்கோ என்ற நாட்டின் சான் சூவான் பகுதியில் நடைபெற்ற 70வது அழகிப் போட்டியில் போலந்து நாட்டினைச் சேர்ந்த கரோலினா பியெலாவாஸ்கா 2021 ஆம் ஆண்டின் உலக அழகிப் பட்டத்தை வென்றார்.
இப்போட்டியில் அமெரிக்காவின் ஸ்ரீசாய்னி மற்றும் கோட்டி டி ஐவரி நாட்டினைச் சேர்ந்த ஒலிவியா யாஷ் ஆகியோர் முறையே இரண்டாவது இடத்தைப் பிடித்த இருவர் ஆவர்.