TNPSC Thervupettagam

உலக ஆசிரியர்கள் தினம் - அக்டோபர் 05

October 7 , 2018 2183 days 717 0
  • உலக ஆசிரியர்கள் தினம் (WTD - World Teacher’s Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 05 அன்று அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் சர்வதேச ஆசிரியர்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டிற்காக யுனெஸ்கோ ஏற்றுக் கொண்டுள்ள கருத்துரு: “கல்வி உரிமை என்பது தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் உரிமையாகும்”
  • யுனிசெப் (UNICEF - United Nations Children Fund), யுஎன்டிபி (UNDP - United Nations Development Programme), சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் சர்வதேச கல்வி (Education International) என்ற நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1994 ஆம் ஆண்டு முதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மேலும் ஆசிரியர்களின் மதிப்பு தொடர்பான 1966 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு/யுனெஸ்கோ பரிந்துரைகள் மீது கையொப்பமிட்டதின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்