உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்களில் விலங்குகள் எதிர்கொள்ளும் துயரங்கள் மற்றும் அவை கொல்லப் படுதல் குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
இந்தத் தினமானது, 40 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் ஆய்வுக்காக உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துதலுக்கு எதிரான தேசிய சங்கத்தின் நோக்கத்தினை மேம் படுத்துவதற்காக நிறுவப்பட்டது.
இந்தச் சங்கமானது 1979 ஆம் ஆண்டில், லார்ட் ஹக் டௌடிங் என்பவரின் பிறந்த நாளன்று இந்த நாளை உருவாக்கியது.