இந்தத் தினமானது, உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்களில், விலங்குகள் பெருமளவில் எதிர்கொள்ளும் பாதிப்புகள் மற்றும் விலங்குகள் கொல்லப்படுவது குறித்தப் பெரும் கவனத்தினை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல ஆண்டுகளாக அழகியல், மருத்துவம், விமானப் போக்குவரத்து மற்றும் இராணுவத் தொழில்துறைகளில் கூட விலங்குகள் பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அறிவியல் ஆய்விற்காக உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான தேசியச் சங்கமானது (NAVS) விலங்குகள் மீதானப் பரிசோதனைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் உலகின் முதல் அமைப்பாகும்.
1979 ஆம் ஆண்டு NAVS ஆனது உலக ஆய்வக விலங்குகள் தினத்தினை நிறுவியது (ஆய்வக விலங்கு தினம் என்றும் குறிப்பிடப்படுகிறது).