சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA) தனது 2023 ஆம் ஆண்டு உலக ஆற்றல் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய நிலக்கரி நுகர்வு ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் 13.5% குறையும் என்று கணிக்கப் பட்டுள்ளது, ஆனால் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நுகர்வு ஆகிய இரண்டும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கணிக்கப்பட்ட கொள்கை சார் சூழ்நிலையின் கீழ் 2030 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிசக்தி தேவை 7% வளர்ச்சியடையும் என்றாலும், இந்த எரிசக்தித் தேவையானது புதுப்பிக்கத்தக்க மற்றும் அணுசக்தி வளங்களை நோக்கி மாறும்.
இருப்பினும், எரிசக்தி விநியோகத்தில் 70%க்கும் அதிகமான பங்கினைப் புதைபடிவ எரிபொருள்கள் கொண்டிருக்கும் என்ற நிலையில் 2022 ஆம் ஆண்டில் தோராயமாக 82% ஆக இருந்த அளவில் இருந்து இது குறைந்துள்ளது.
மின்சார ஆற்றல் ஆனது எதிர்காலத்தின் "எரிபொருளாக" உருவெடுத்துள்ள நிலையில் 2020 ஆம் ஆண்டில் 20% ஆக இருந்த அதன் இறுதி நுகர்வு 2030 ஆம் ஆண்டில் 28% ஆக உயர உள்ளது.