TNPSC Thervupettagam

உலக ஆற்றல் கண்ணோட்ட அறிக்கை 2024

October 25 , 2024 32 days 91 0
  • சர்வதேச எரிசக்தி முகமையினால் (IEA) வெளியிடப்பட்ட இந்த ஒரு அறிக்கையானது முக்கிய ஆற்றல் போக்குகள் மற்றும் கணிப்புகளை வழங்குகிறது.
  • 2023 ஆம் ஆண்டில் மட்டும், உலகளவில் 560 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலானது நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றினை விஞ்சி, மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான பெரும் முன்னணி மூல ஆதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் புதிய கார் விற்பனையில் மின்சார வாகனங்கள் 50% பங்கினை வகிக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு, மேலும் உலகளாவிய மின்சார வாகன (EV) சந்தை வேகமாகவும் விரிவடைந்து வருகிறது.
  • இந்தியா 2028 ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் சரியாக செயலாற்றி வருகிறது.
  • 2035 ஆம் ஆண்டில் இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி சுமார் 70% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதனால் சிமெண்ட் உற்பத்தி சுமார் 55% உயரும்.
  • காற்றுப் பதனாக்கிகளின் (AC) உற்பத்தி சுமார் 4.5 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இது 2035 ஆம் ஆண்டில் மெக்சிகோ நாட்டில் எதிர்பார்க்கப்படும் மின் நுகர்வை விட, இந்தியாவின் காற்றுப் பதனாக்கிகளுக்கான மின்சாரத் தேவை அதிகரிக்க உள்ளது.
  • இந்தியாவின் மொத்த எரிசக்தித் தேவையானது 2035 ஆம் ஆண்டிற்குள் சுமார் 35% அளவு அதிகரிக்கும்.
  • அதன் மின் உற்பத்தி திறன் ஆனது 1400 ஜிகாவாட் என்ற ஒரு அளவிற்கு சுமார் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்