TNPSC Thervupettagam

உலக ஆற்றல் மாற்றக் கண்ணோட்டம் 2023

April 3 , 2023 475 days 246 0
  • ஆற்றல் மாற்றம் சார்ந்த தொழில்நுட்பங்களில் மேற்கொள்ளப்படும் உலக நாடுகளின் முதலீடு ஆனது 2022 ஆம் ஆண்டில் 1.3 டிரில்லியன் டாலர் என்ற புதியச் சாதனையை எட்டியுள்ளது.
  • இது சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
  • ஆனால், 2022 ஆம் ஆண்டில் உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளில் வளர்ந்து வரும் நாடுகளில் 15 சதவீதத்தினை மட்டுமே பெற்றுள்ளன.
  • குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளில் 2013 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சராசரியாக மொத்தப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளில் 0.84 சதவீதத்தினை மட்டுமே பெற்றுள்ளன.
  • இந்த முதலீடுகளில் பெரும்பகுதியினை பிரேசில், சிலி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  • 2017 ஆம் ஆண்டில் 27 சதவீதமாக இருந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மொத்த முதலீடானது 2020 ஆம் ஆண்டில் 15 சதவீதமாக குறைந்துள்ளன.
  • தெற்காசியாவில், தனிநபர் முதலீடுகள் 2015 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 26 சதவீதம் குறைந்துள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2021 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலக நாடுகளுக்குச் சராசரியாக 5.7 டிரில்லியன் டாலர் வருடாந்திர முதலீடுகள் தேவைப் படும்.
  • இந்த இலக்கை அடைவதற்கு 2031 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 3.7 டிரில்லியன் டாலர் தேவைப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்