சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையானது சமீபத்தில் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, உலகளாவிய ஒரு ஆற்றல் மாற்றமானது இன்னும் "சரியான பாதையில் மேற்கொள்ளப் படவில்லை" என்பதோடு மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கினை எட்டும் பாதையில் சற்று பின்தங்கியே உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது.
1.5°C என்ற ஒரு இலக்கினை மெய்யாக்க, இன்று 3,000 ஜிகாவாட் (GW) ஆக உள்ள ஆற்றல் திறன் நிறுவல்களின் திறன் அளவுகள் ஆனது ஆண்டிற்குச் சராசரியாக 1,000 GW என்ற அளவில் 2030 ஆம் ஆண்டில் 10,000 GW ஆக உயர்த்தப்பட வேண்டும்.
சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 2022 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த நிறுவல்களில் மூன்றில் இரண்டு பங்கினைக் கொண்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில், உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டில் 85 சதவீதம் ஆனது உலக மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கேப் பயன் அளித்தது.
2022 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கூடுதல் திறனில் ஆப்பிரிக்கா 1 சதவீதத்தினை மட்டுமே கொண்டுள்ளது.