TNPSC Thervupettagam

உலக ஆற்றல் மாற்றங்கள்: கண்ணோட்ட அறிக்கை 2023

April 13 , 2023 592 days 291 0
  • சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையானது சமீபத்தில் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, உலகளாவிய ஒரு ஆற்றல் மாற்றமானது இன்னும் "சரியான பாதையில் மேற்கொள்ளப் படவில்லை" என்பதோடு மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கினை எட்டும் பாதையில் சற்று பின்தங்கியே உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது.
  • 1.5°C என்ற ஒரு இலக்கினை மெய்யாக்க, இன்று 3,000 ஜிகாவாட் (GW) ஆக உள்ள ஆற்றல் திறன் நிறுவல்களின் திறன் அளவுகள் ஆனது ஆண்டிற்குச் சராசரியாக 1,000 GW என்ற அளவில் 2030 ஆம் ஆண்டில் 10,000 GW ஆக உயர்த்தப்பட வேண்டும்.
  • சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 2022 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த நிறுவல்களில் மூன்றில் இரண்டு பங்கினைக் கொண்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில், உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டில் 85 சதவீதம் ஆனது உலக மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கேப் பயன் அளித்தது.
  • 2022 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கூடுதல் திறனில் ஆப்பிரிக்கா 1 சதவீதத்தினை மட்டுமே கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்