TNPSC Thervupettagam

உலக ஆற்றல் முதலீட்டு அறிக்கை 2021

June 10 , 2021 1138 days 571 0
  • சர்வதேச எரிசக்தி முகமையானது 2021 ஆம் ஆண்டிற்கான உலக ஆற்றல் முதலீட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலகளாவிய ஆற்றல் முதலீடானது இந்த ஆண்டு முதல் மீண்டும் எழுச்சி பெற்று ஆண்டுக்கு 10% என்ற அளவிற்கு அதிகரித்து 1.9 டிரில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப் படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • பெரும்பாலான முதலீடுகள் வழக்கமான புதைபடிம எரிபொருள் உற்பத்தித் துறையிலிருந்து மடை மாற்றப் பட்டு ஆற்றல் மற்றும் உற்பத்திப் பயன்பாடு போன்ற துறைகளில் மேற்கொள்ளப் படும்.
  • உலகளாவிய ஆற்றல் தேவையானது 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட குறைவினை ஈடு கட்டும் வகையில் 2021 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 4.6% எனும் வீதத்தில் உயரும் என கணிக்கப் பட்டுள்ளது.
  • புதைபடிம எரிபொருள்களின் விலையானது ஒரு தடைக் கல்லாக நிலவினாலும் ஆற்றல் செயல்திறன் துறையானது அதன் முதலீட்டில் 10% உயர்வினைக் காணும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்