ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 அன்று உலக இசை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இது வட துருவத்தில் ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுது கொண்ட கோடைக்காலத்தின் நீண்ட பகல் தினத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றது.
உலக இசை தினம் பிரான்சில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது இத்தினம் உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 120 நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது அமெரிக்க நடிகரான ஜோயல் கோஹென் பேக் என்பவரால் 1976 ஆம் ஆண்டில் முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டது.
1982 ஆம் ஆண்டு ஜுன் 21 அன்று முதலாவது உலக இசை தினம் நிகழ்ந்தது.
இத்தினம் இசை மற்றும் இசைக் கலைஞர்களை அனுசரிக்கின்றது.