TNPSC Thervupettagam

உலக இடம்பெயரும் பறவைகள் தினம் (WMBD) – மே 09

May 12 , 2020 1662 days 789 0
  • இது அமெரிக்காவிற்கான சுற்றுச்சூழல் (EFTA - Environment for the Americas) என்ற அமைப்புடன் இணைந்து இடம்பெயரும் உயிரினங்கள் மீதான ஒப்பந்தம் (CMS - Convention on Migratory Species), ஆப்பிரிக்க-யூரேசிய நீர்ப்பறவை ஒப்பந்தம் (AEWA - African-Eurasian Waterbird Agreement) ஆகியவற்றினால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பறவைகள் நமது உலகத்தை இணைக்கின்றன” என்பதாகும்.
  • 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர், சர்வதேச இடம்பெயரும் பறவைகள் தினம் (IMBD - International Migratory Bird Day) மற்றும் உலக இடம்பெயரும் பறவைகள் தினம் (WMBD - World Migratory Bird Day) என்று 2 உலகின் மிகப்பெரிய பறவை விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
  • 2017 ஆம் ஆண்டில், மணிலாவில் நடைபெற்ற CMS பங்காளர்கள் மாநாட்டின்  12வது அமர்வின் போது EFTA, CMS மற்றும் AEWA ஆகியன இணைந்து உலகம் முழுவதும் இடம்பெயரும் பறவைகளின் பயணம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஒரு புத்தாக்கப் பங்களிப்பை அறிவித்துள்ளன. 
  • 2018 ஆம் ஆண்டு முதல், ஒரு புதிய கூட்டுப் பிரச்சாரமானது WMBD என்ற ஒற்றைப் பெயரை ஏற்றுக் கொண்டுள்ளது. 
  • இந்தத் தினத்தை அனுசரிப்பதற்கான முக்கியமான நிகழ்வுகளானது ஆண்டிற்கு 2 முறை, அதாவது மே மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களின் 2வது சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகின்றது.

CMS பற்றி
  • தனது உறுப்பு நாடுகள் முழுவதிலும் இடம்பெயரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் CMS ஆனது நடைமுறையில் உள்ளது.
  • இது பான் ஒப்பந்தம் (Bonn Convention) என்றும் அழைக்கப்படுகின்றது.
  • CMS என்பது உறுப்பு நாடுகள் முழுவதும் இருக்கும் நிலப் பகுதி மற்றும்  நீர்ப் பகுதியைச் சார்ந்த வகையிலான பறவை இனங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்காக ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரே அமைப்பு இதுவாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்