உலக இட்லி தினமானது சென்னையில் வசிக்கும் புகழ்பெற்ற உணவு சமையல் கலைஞரான இனியவன் என்பவரால் தொடங்கப்பட்டது.
இது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இட்லி ஆனது இந்தியப் பிரதான உணவாக இருந்த போதிலும், சில வரலாற்றாசிரியர்கள் இதன் தாயகம் இந்தோனேசியா என்று கூறுகின்றனர்.
இந்த நாடானது நொதிக்க வைத்தல் உணவிற்கான மிகச் சிறப்பான ஒரு நாடாகக் கருதப்படுகின்றது.
இந்தப் பாரம்பரியமானது “வேக வைக்கப்பட்ட இட்லியாக” பொது ஆண்டு 800 முதல் பொது ஆண்டு 1200 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவிற்கு வந்தது.
உளுந்தம்பருப்பு மாவிலிருந்துத் தயாரிக்கப்பட்ட உணவு வகையான “இட்லியஜ்” என்ற வார்த்தையிலிருந்து “இட்லி” என்ற பெயர் வந்துள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது கி.பி. 920 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு கன்னட நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இது தவிர்த்து கி.பி.1130 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமஸ்கிருத மனசோல்சா என்ற நூலானது உளுந்தம்பருப்பிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு உணவான “இடாரிகா” என்ற உணவைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
17 ஆம் நூற்றாண்டில், தமிழ் மக்கள் முதன் முறையாக “இட்லி” என்ற ஒரு உணவை அழைத்தனர்.