TNPSC Thervupettagam

உலக இணைப்பு அறிக்கை, 2024

March 20 , 2024 252 days 299 0
  • DHL மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் வணிகக் கல்லூரி ஆகியவை “புதிய DHL உலக இணைப்பு அறிக்கை 2024” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • இந்த அறிக்கையானது வர்த்தகம், மூலதனம், தகவல் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் உலகம் முழுவதும் மக்கள் எவ்வாறு இடம் பெயர்கின்றனர் என்பதைக் கண்காணிப்பதோடு, 181 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் உலகமயமாக்கலை மதிப்பிடுகிறது.
  • உலகமயமாக்கல் ஆனது 2022 ஆம் ஆண்டில் சாதனை அளவிலான உச்சத்தை எட்டிய நிலையில், 2023 ஆம் ஆண்டில் அதிக அளவிலேயே இருந்தது.
  • சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் உலகளாவிய உற்பத்தியின் பங்கு 2022 ஆம் ஆண்டில் ஒரு சாதனை உச்சத்தினை எட்டியது.
  • இந்த அறிக்கையானது, அதிகளவில் உலகமயமாக்கப்பட்ட ஒரு நாடாக சிங்கப்பூர் நாட்டினை மதிப்பிட்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து நெதர்லாந்து இடம் பெற்று உள்ளது.
  • அதன் படி, 143 நாடுகள் உலகளவில் அதிக அளவில் இணைப்பினைக் கொண்டுள்ள அதே சமயம் 38 நாடுகளில் மட்டுமே அவற்றின் இணைப்பு நிலைகள் குறைந்துள்ளன.
  • ஐரோப்பா அதிகளவில் உலகளாவிய இணைப்பு கொண்ட பிராந்தியமாகும் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து வட அமெரிக்கா மற்றும் 'மத்தியக் கிழக்கு & வட ஆப்பிரிக்கா' ஆகியப் பிராந்தியங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்