DHL மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் வணிகக் கல்லூரி ஆகியவை “புதிய DHL உலக இணைப்பு அறிக்கை 2024” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்த அறிக்கையானது வர்த்தகம், மூலதனம், தகவல் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் உலகம் முழுவதும் மக்கள் எவ்வாறு இடம் பெயர்கின்றனர் என்பதைக் கண்காணிப்பதோடு, 181 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் உலகமயமாக்கலை மதிப்பிடுகிறது.
உலகமயமாக்கல் ஆனது 2022 ஆம் ஆண்டில் சாதனை அளவிலான உச்சத்தை எட்டிய நிலையில், 2023 ஆம் ஆண்டில் அதிக அளவிலேயே இருந்தது.
சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் உலகளாவிய உற்பத்தியின் பங்கு 2022 ஆம் ஆண்டில் ஒரு சாதனை உச்சத்தினை எட்டியது.
இந்த அறிக்கையானது, அதிகளவில் உலகமயமாக்கப்பட்ட ஒரு நாடாக சிங்கப்பூர் நாட்டினை மதிப்பிட்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து நெதர்லாந்து இடம் பெற்று உள்ளது.
அதன் படி, 143 நாடுகள் உலகளவில் அதிக அளவில் இணைப்பினைக் கொண்டுள்ள அதே சமயம் 38 நாடுகளில் மட்டுமே அவற்றின் இணைப்பு நிலைகள் குறைந்துள்ளன.
ஐரோப்பா அதிகளவில் உலகளாவிய இணைப்பு கொண்ட பிராந்தியமாகும் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து வட அமெரிக்கா மற்றும் 'மத்தியக் கிழக்கு & வட ஆப்பிரிக்கா' ஆகியப் பிராந்தியங்கள் உள்ளன.