அடிப்படை இணைய சங்கேதப் பண ஏற்பிற்கான மதிப்பீட்டுப் பட்டியலில் இடம் பெற்ற 154 நாடுகளில் இந்தியா முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
இது சவாலான ஒழுங்குமுறை நிலைமைகளை எதிர்கொள்வதில் உள்ள குறிப்பிடத் தக்க நெகிழ்திறனைக் குறிக்கிறது.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறிப்பிடத் தக்க மீட்சியைக் குறிக்கிறது.
செயின் அநாலிசிஸ் நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டு ஏற்புக் குறியீட்டில் இந்தியா நான்காவது இடத்தினைப் பெற்றிருந்தது.
இந்தியாவினையடுத்து நைஜீரியா, வியட்நாம், அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இந்தத் தரவரிசையில் முதல் 5 இடங்களைப் பிடித்தன.
2022 ஆம் ஆண்டு FTX திவாலானதை தொடர்ந்து, முதன்மையாக குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், அடிப்படை இணையச் சங்கேதப் பண ஏற்பு நிலை மீண்டு வருவதை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.
அடிப்படை இணையச் சங்கேதப் பண ஏற்பு என்பது அன்றாட வாழ்வில் இணையச் சங்கேதப் பண முறைகளை பரவலான அளவில் ஏற்றுக் கொள்ளல் மற்றும் அதன் பயன்பாடு ஆகும்.