ஒவ்வொரு வருடமும் ஜனவரி 10-ம் தேதி உலக இந்தி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இது 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டு நடத்தப்பட்ட முதலாவது உலக இந்தி மாநாட்டின் ஆண்டு விழாவாக அனுசரிக்கப்படுகின்றது.
உலக இந்தி தினத்தின் முக்கிய நோக்கம் உலகளாவிய அளவில் இந்தி மொழியை மேம்படுத்துவதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதியன்று அனுசரிக்கப்படும் தேசிய இந்தி தினம் என்பது தேவநாகரி எழுத்து வடிவில் இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் குறிக்கின்றது.
உலக இந்தி மாநாடு 2006 ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதன்முதலாக நடத்தப்பட்டது.