1949 ஆம் ஆண்டு இதே நாளில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் (UNGA) இந்தி மொழி முதன்முதலில் பேசப்பட்டது.
இந்தி மொழி பற்றிய பெரும் விழிப்புணர்வைப் பரப்புதல், சர்வதேச தளங்களில் அதன் பயன்பாட்டை மிக நன்கு ஊக்குவித்தல் மற்றும் உலகளவில் இந்தி மொழி பேசும் சமூகங்களிடையே உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
1950 ஆம் ஆண்டில், இந்தி மொழியானது இந்திய ஒன்றியத்தின் அதிகாரப் பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது மற்றும் இந்திய அரசியலமைப்பின் 343வது சரத்தின் கீழ் அதன் எழுத்து வடிவமாக தேவநகரியும் நியமிக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டில், முதல் உலக இந்தி மொழி மாநாட்டை மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Hindi: A Global Voice of Unity and Cultural Pride" என்பதாகும்.
12வது உலக இந்தி மொழி மாநாடு-2023 ஆனது ஃபிஜியில் ஏற்பாடு செய்யப்பட்டது.