ஹேமோபிலியா என்பது ரத்தம் முறையாக உறையாத வகையில் உள்ள ஒரு அரிதான மரபணு தொடர்பான இரத்தப் போக்குக் கோளாறு ஆகும்.
இதன் விளைவாக ஹேமோபிலியாவை அமையப் பெற்றவர்கள் ஒரு காயத்தைப் பெற்றடைந்த பின்பு நீண்ட காலத்திற்கும் தன்னிச்சையான உதிரப் போக்கினால் அவதிப்படுவர்.
ஒவ்வொரு ஏப்ரல் 17-ம் தேதியும் உலக ஹேமோபிலியா தினமாக ஹேமோபிலியாவைப் பற்றியும் இதர உள்ளார்ந்த இரத்தக் கசிவு கோளாறுகளைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
1989 ஆம் ஆண்டு உலக ஹேமோபிலியா கூட்டமைப்பு (World Federation of Hemophilia - WFH) மூலம் உலக ஹேமோபிலியா தினம் ஆரம்பிக்கப்பட்டது.
துரிதத் தகவல்கள்
ஒவ்வொரு காயமும் எப்பொழுதும் உயிருக்கு ஆபத்தைத் தரக்கூடியவை ஆகாது. ஹேமோபிலியா நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் உறைய வைக்கக் கூடிய காரணி என்றழைக்கப்படும் ஒரு புரதம் இல்லாமலிருப்பதாலோ அல்லது அவை ஒழுங்காக செயலாற்றாததாலோ இரத்தக் கசிவை அடைகின்றன.
பெரும்பாலும் அதிகப்படியான மக்கள் ஹேமோபிலியா என்பது ஆண்களை மட்டுமே தாக்குகின்றது எனக் கருதுகின்றனர். ஆனால் அரிதாக ஓசையற்ற நோய்க் கடத்திகளான பெண்களும் இரத்தக் கசிவிற்கான அறிகுறிகளைக் கொண்டு அவதியுறுகின்றனர்.