இந்த நோயைப் பற்றிய தவறான எண்ணங்களை நீக்கி, மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மற்றும் பராமரிப்புத் தேர்வுகளை நோக்கிய மேம்பட்ட ஆராய்ச்சிக்கு ஆதரவளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தலசீமியா (இரத்த அழிவுச் சோகை நோய்) என்பது ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும், இயல்பு நிலையுடன் ஒப்பிடும் போது அது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படும் ஒரு மரபுவழிக் கோளாறாகும்.
ஹீமோகுளோபின் என்பது ஆக்ஸிஜனைக் சுமந்து செல்வதற்குக் காரணமான புரதம் ஆகும்.
இந்த நாள் சர்வதேச தலசீமியா கூட்டமைப்பினால் (TIF) 1994 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Empowering Lives, Embracing Progress: Equitable and Accessible Thalassemia Treatment for All" என்பதாகும்.