TNPSC Thervupettagam

உலக இரத்த உறையாமை நோய் தினம் – ஏப்ரல் 17

April 19 , 2023 492 days 185 0
  • இந்தத் தினமானது ஃபிராங்க் ஷ்னாபல் என்பவரின் பிறந்தநாளை நினைவு கூருகிறது.
  • இவர் உலக இரத்த உறையாமை நோய் (ஹீமோபிலியா) கூட்டமைப்பை நிறுவியவர் ஆவார்.
  • இரத்த உறையாமை நோய் மற்றும் பிற இரத்தப் போக்குக் கோளாறுகள் பற்றிய விழிப்பு உணர்வினை அதிகரிக்கவும் அது குறித்த கல்வியை வழங்கவும் இந்தத் தினமானது ஒரு தளமாகச் செயல்படுகிறது.
  • ஒரு அரிய நோயான இரத்த உறையாமை நோய் என்ற இந்த நோயில் சில குறிப்பிட்ட உறைதல் காரணிகளின் குறைபாட்டின் காரணமாக இரத்தம் சரியாக உறைவதில்லை.
  • சில சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு நீண்ட நேர இரத்தப் போக்கு ஏற்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “அனைவருக்குமான அணுகல்: கூட்டாண்மை. கொள்கை. முன்னேற்றம். அரசாங்கத்தினை ஈடுபடுத்துதல், மரபுவழி இரத்தப் போக்கு கோளாறுகளைத் தேசியக் கொள்கையில் ஒருங்கிணைத்தல்” என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்