உலக இரத்த ஒட்டுண்ணி (Chagas disease) நோய் தினம் – ஏப்ரல் 14
April 16 , 2020 1687 days 613 0
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று உலகச் சமூகமானது முதன்முறையாக உலக இரத்த ஒட்டுண்ணி நோய் தினத்தை அனுசரித்தது.
மேலும் இந்த நோய் “அமெரிக்க டிரப்பனோசோமியாசிஸ்” (American trypanosomiasis) என்றும் அழைக்கப் படுகின்றது.
இந்த நோயானது மிகவும் அமைதியான மற்றும் அமைதியாக்கப் பட்ட நோயாகக் குறிப்பிடப் படுகின்றது.
இது மெதுவாக செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது. இது வறுமையில் வாழும் மக்களை மிக அதிக அளவில் பாதிக்கின்றது.
இது மிக முக்கியமாக இலத்தீன் அமெரிக்காவில் உள்ள வறுமையில் வாடும் மக்களைப் பாதிக்கின்றது.
இது அமெரிக்கா, மேற்கு பசிபிக், ஐரோப்பா, கனடா ஆகியவற்றில் மிகப் பரவலாகக் காணப்படுகின்றது.
இத்தினமானது உலகச் சுகாதார அமைப்பால் குறிக்கப்படுகின்றது.
இது டி குரூஸி (T cruzi) ஒட்டுண்ணி போன்ற நோய்க் கடத்தியால் கடத்தப்படுகின்றது.
மேலும் இது இரத்தத்தை உறிஞ்சும் வண்டுகளின் சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றுடன் ஏற்படும் தொடர்பின் மூலமும் பரவுகின்றது.
ஆனால் இது ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் பரவாது.
இருப்பினும், இது பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை வேறு ஒருவருக்குச் செலுத்துவதின் மூலம் பரவும் திறன் கொண்டது.
1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று பிரேசிலில் இந்த நோய் கண்டறியப்பட்ட நோயாளியான டாக்டர் கார்லோஸ் ரிபேரியோ ஜஸ்டினேனோ சாகாஸ் என்பவரின் நினைவாக இதற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
இது புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் வளரும் நாடுகளில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மக்களைப் பாதிக்கின்றது என்று அதற்கு பொருள்.