TNPSC Thervupettagam

உலக இரத்த தான தினம் – ஜுன் 14

June 16 , 2021 1170 days 411 0
  • பாதுகாப்பான (ஆரோக்கியமான) இரத்தத்தின்  தேவை பற்றியும் இரத்தமாற்று சிகிச்சைக்குத் தேவையான இரத்தத்தினுடைய உயிர்காக்கும் கூறுகள் பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ரத்தத்தைக் கொடுங்கள், உலகத்தைத் துடிக்க வைப்போம்” (Give blood and keep the world beating) என்பதாகும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலக இரத்த தான தினத்தை நடத்தும் நகரம் இத்தாலியின் ரோம் நகரமாகும்.
  • இந்த தினமானது முதல்முறையாக 2005 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது உலக சுகாதார அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செந்நிலவு கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • கார்ல் லேண்ட்ஸ்டீனரின் பிறந்த நாளின் நினைவாக ஜுன் 14 ஆம் தேதியானது உலக இரத்த தான தினமாகக் கொண்டாடப் படுகிறது.
  • ABO என்ற ஒரு இரத்த வகையைக் கண்டறிந்ததற்காக கார்ல் லேண்ட்ஸ்டீனெருக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்