ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது (Stockholm International Peace Research Institute-SIPRI) 2018 ஆம் ஆண்டிற்கான உலக இராணுவ செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அறிக்கையின்படி உலகளாவிய அளவில் ஒட்டு மொத்த இராணுவ செலவினங்களானது கடந்த ஆண்டை விட 2.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா இந்தியா மற்றும் பிரான்சு ஆகியவை 2018 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்த 5 நாடுகள் ஆகும்.
அமெரிக்காவானது 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக செலவை அதிகரித்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து சீனாவின் செலவுகள் அதிகரித்து வருகின்றன.