இந்தத் தினமானது இருமுனையப் பிறழ்வுக் கோளாறால் பாதிக்கப்பட்ட புகழ்பெற்ற ஓவியக் கலைஞரான வின்சென்ட் வான் கோ அவர்களின் பிறந்தநாளுடன் ஒன்றி வருகிறது.
இந்தத் தினமானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் இந்த வாழ்நாள் முழுவதுமான மனநலபிரச்சனைகள் தொடர்பான தவறான கருத்துக்களை அகற்றச் செய்வதையும், அந்நிலை குறித்த விழிப்புணர்வினை பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நோய் பொதுவாக மன உளைச்சல் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஹைபோமேனியா (மனப்பித்து) மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட தீவிரமான மனநிலை மாற்றங்களை உள்ளடக்கியது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு #BipolarStrong என்பதாகும்.