TNPSC Thervupettagam

உலக இளையோர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்

November 26 , 2018 2064 days 541 0
  • கனடாவின் மார்க்ஹாமில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான லீ நிங் பிடபிள்யூஎப்  (BWF) உலக இளையோர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முன்னிலை இளையோர் பாட்மிண்டன் வீரரான லக்ஷயா சென் (17) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஒற்றையருக்கான அரை இறுதிப் போட்டியில் இவர் தாய்லாந்தைச் சேர்ந்த உலக முதல்தர வீரரான குன்லவுட் விட்டிட்சார்னிடம் தோல்வியடைந்தார்.
  • புகழ்பெற்ற இந்த போட்டியில் சென்னின் முதலாவது பதக்கம் இதுவாகும். இதற்குமுன் இவர் இப்போட்டியில் மூன்று முறை பங்கு பெற்றுள்ளார்.
  • பிடபிள்யூஎப் உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 5-வது வெண்கலப் பதக்கம் இதுவாகும். இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தை மட்டும் வென்றுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்