உலக உடல் பருமன் கூட்டமைப்பானது, “2023 ஆம் ஆண்டிற்கான உலக உடல் பருமன் குறித்த தகவல் தொகுப்பு” என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் குழந்தைப் பருவ உடல் பருமன் ஆனது 2035 ஆம் ஆண்டளவில் 9.1 சதவீதமாக அதிகரிக்கும்.
இந்தியாவில் 2035 ஆம் ஆண்டிற்குள் 11 சதவீதம் பேர் அதிக உடல் பருமனைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
2020 மற்றும் 2035 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் வயது வந்தோர் மத்தியில் நிலவும் உடல் பருமனில் ஏற்படும் வருடாந்திர அதிகரிப்பானது 5.2 சதவீதமாக இருக்கும்.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் உடல் பருமன் அபாயம் ஆனது 3 சதவிகிதம் ஆக இருந்த நிலையில் இது 2035 ஆம் ஆண்டில் இந்த ஆபத்து 12 சதவிகிதமாக அதிகரிக்கும்.
2020 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகள் மத்தியில் இதற்கான அபாயம் 2 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்த 12 ஆண்டுகளில் இது 7 சதவீதமாக உயரும்.
2020 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்கள் மத்தியில் ஏற்படும் உடல் பருமன் ஆபத்து 7 சதவிகிதம் ஆக இருந்த நிலையில், இது 2035 ஆம் ஆண்டிற்குள் 13 சதவிகிதமாக உயரும்.
2020 ஆம் ஆண்டில் ஆண்கள் மத்தியில் ஏற்படும் உடல் பருமன் ஆபத்து 4 சதவீதமாக இருந்த நிலையில், இது அடுத்த 12 ஆண்டுகளில் 8 சதவீதமாக உயரும்.
2035 ஆம் ஆண்டிற்குள் உடல் பருமன் ஆபத்து 4.32 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்தப் பொருளாதார இழப்பிற்கு வழி வகுக்கும்.
இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவீதத்திற்குச் சமம் ஆகும்.
இது இந்தியாவின் மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியின் மீது ஏற்படுத்தும் தாக்கம் 1.8 சதவீதமாக இருக்கும்.