உலக உடல்பருமன் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 11ம் தேதியன்று உலகம் முழுவதும் உலகளாவிய உடல் பருமன் பிரச்சினைக்கு நடைமுறைத் தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகின்றது.
இந்த வருடத்திற்கான கருத்துரு - “இத்தருணம் எடைப் பிரச்சினையை குறைப்பதற்கானதாகும்“.
இத்தினம் உலக சுகாதார மையத்துடன் அலுவல் ரீதியாக தொடர்புகள் கொண்ட லாப நோக்கற்ற அமைப்பான உலக உடல் பருமன் கூட்டமைப்பால் நடத்தப்படுகின்றது.
மேலும் இந்த அமைப்பு உடல் பருமனுக்கான லான்செட் ஆணையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் அமைப்பாகும்.
முதல் உலக உடல்பருமன் தினமானது 2015ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.