சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) ஆனது, 2023 ஆம் ஆண்டு உலக உணவுக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை மற்றும் அரசியல் ரீதியான உறுதியற்றத் தன்மை போன்ற பல நெருக்கடிகள் காரணமாக 2020-2022 ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் 45 நாடுகளில் உள்ள 205 மில்லியன் மக்கள் நெருக்கடி நிலை அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை அல்லது மோசமான நிலையை எதிர் கொண்டனர்.
ஆப்பிரிக்காவின் மக்கள் தொகையில் 20% பேர் உணவுப் பாதுகாப்பின்மை நிலையிலும், ஊட்டச் சத்துக் குறைபாடு உடையவர்களாகவும் உள்ளனர்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, 2050 ஆம் ஆண்டிற்குள் மேலும் 72 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டு நிலையினால் பாதிக்கப் படுவார்கள்.
உலக மக்கள்தொகையில் பாதி பேர் அல்லது உலகளவில் சுமார் 3.83 பில்லியன் மக்கள் விவசாய உணவுமுறைகள் சார்ந்த வாழ்வாதாரங்களை நம்பியிருக்கும் குடும்பங்களில் வாழ்கின்றனர்.