TNPSC Thervupettagam

உலக உணவுப் பாதுகாப்புக் குறியீடு (GFSI) – 2022

December 22 , 2022 702 days 534 0
  • இது 11வது உலக உணவுப் பாதுகாப்புக் குறியீடாகும்.
  • இது பிரிட்டிஷ் வார இதழான "தி எகனாமிஸ்ட்" இதழ் மூலம் வெளியிடப்பட்டது.
  • இதில் பின்லாந்து முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் உள்ளன.
  • இந்த அறிக்கையில், 59வது இடத்தினைப் பெற்ற தென்னாப்பிரிக்கா, துனிசியாவை பின்னுக்குத் தள்ளி, ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே மிகவும் உணவுப் பாதுகாப்பு மிக்க நாடாக மாறியது.
  • ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதியில் உள்ள ஒரு நாடு இந்தக் கண்டத்தில் முன்னிலை வகுப்பது இதுவே முதல் முறையாகும்.
  • மேலும் இந்த அறிக்கையானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகளாவிய உணவுச் சூழலமைவில் சீரழிவு ஏற்பட்டு வருவதாகவும், உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகின்ற நிலையையும் எடுத்துரைக்கிறது.
  • 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் இந்தியா அல்ஜீரியாவுடன் இணைந்து 68வது இடத்தினைப்  பெற்று உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்