TNPSC Thervupettagam

உலக உணவுப் பாதுகாப்புத் தினம் – ஜுன் 07

June 7 , 2019 1999 days 567 0
  • முதல் வருடாந்திர உலக உணவுப் பாதுகாப்புத் தினமானது ஜுன் 07 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இதன் கருத்துருவானது “உணவுப் பாதுகாப்பு : அனைவரின் வேலை” என்பதாகும்.
  • இந்த நாளானது பாதுகாப்பான உணவின் முக்கியத்துவத்தைக் கடைபிடிக்கவும் பாதுகாப்பற்ற உணவு தொடர்பான சிக்கல்களைக் குறைக்கவும் அனுசரிக்கப்படுகின்றது.
  • வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள சுமார் 3 மில்லியன் மக்கள் உணவு மற்றும் நீரினால் ஏற்படும் நோய்களினால் உலகமெங்கிலும் இறக்கின்றனர்.
  • 2018 ஆம் ஆண்டின் ஐ.நா. பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலம் இந்த வருடாந்திர தினமானது கடைபிடிக்க முடிவெடுக்கப்பட்டது.
  • இந்த கொண்டாட்டத்தின் தொடக்க பதிப்பானது உலக சுகாதார நிறுவனம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்