உலக உணவு தினம் (World Food Day - WFD) என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு சர்வதேச நாள் ஆகும்.
இந்த நாளானது 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization - FAO) நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு கொண்டாடப் படுகின்றது.
1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் FAO அமைப்பின் 20வது பொது மாநாட்டில் FAO இன் உறுப்பு நாடுகளால் WFD நிறுவப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நாளானது ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவுகளை மலிவு விலையில் மற்றும் அனைவருக்கும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்குப் பல துறைகளில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருப்பொருள் "எங்கள் செயல்கள் எங்கள் எதிர்காலம், ஒரு #ஜீரோஹங்கர் (#சுழியப் பட்டினி) உலகத்திற்கான ஆரோக்கியமான உணவுகள்" என்பதாகும்.