உலக உணவு நெருக்கடிகள் குறித்த IGAD ஆணையத்தின் பிராந்திய வாரியான அறிக்கை
July 23 , 2023 491 days 257 0
மேம்பாடு குறித்த அரசுகளுக்கிடையேயான ஆணையம் (IGAD) இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, உணவு நெருக்கடிகளின் பாதிப்பு அளவைப் பற்றிய மகத்தான தகவல்களை வழங்கச் செய்வதோடு, தகவலறிந்து முடிவெடுப்பதற்கான ஒரு அடித் தளமாகச் செயல்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் உள்ள 55.45 மில்லியன் மக்களுக்கு அவசர உணவுப் பொருட்கள் வழங்கீட்டு உதவி தேவைப்பட்டதோடு, இது மிகக் கடுமையான நெருக்கடி நிலையையும் குறிக்கிறது.
இந்தப் பிராந்தியத்தில் நிலவும் மிகக் கடுமையான உணவு நெருக்கடிகளை எதிர்த்துப் போராடுவதற்காக இணைந்துச் செயல்படுவதற்கான ஒரு அவசரத் தேவையை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
காலநிலைக் காரணிகள் ஆனது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் நிலவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கான முதன்மைக் காரணமாக அடையாளம் காணப் பட்டுள்ளது.
அதற்கு மாறாக டிஜிபெளட்டி, தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகியவை திடீர்ப் பொருளாதாரத் தாக்கங்களால் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர் கொண்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.