2022 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நெருக்கடிகள் குறித்த ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது உலகளவில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலவுவதை எடுத்துக் காட்டுகிறது.
உணவு நெருக்கடிகளுக்கு எதிரான உலகக் கட்டமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
53 நாடுகள் அல்லது பிரதேசங்களில் உள்ள சுமார் 193 மில்லியன் மக்கள் 2021 ஆம் ஆண்டில் நெருக்கடிக் காலம் அல்லது மோசமான சூழ்நிலைகளில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.
எத்தியோப்பியா, தெற்கு மடகாஸ்கர், தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில், சுமார் 6 லட்சம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையின் மிகக் கடுமையான கட்டத்தில் இருந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கான மூன்று முக்கிய காரணிகள் மோதல், மோசமான வானிலை, பொருளாதார நெருக்கடிகள் ஆகியனவாகும்.