TNPSC Thervupettagam
June 15 , 2020 1504 days 719 0
  • இந்திய-அமெரிக்க மண்வள ஆராய்ச்சியாளரான டாக்டர் ரத்தன் லால் என்பவர் உலக உணவு விருது அமைப்பினால் வழங்கப்படும் 2020 உலக உணவு விருதினை வென்றுள்ளார்.
  • இது இயற்கை வளங்களைப் பாதுகாத்து, காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் உணவு உற்பத்தி முறையை அதிகரிப்பதற்காக வேண்டிய மண்வள மைய அணுகுமுறையை மேம்படுத்துதல் மற்றும் அந்த முறையை மையப்படுத்துதல் ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டுள்ளது. 
  • உலக உணவு விருதானது பொது உணவுக் கழகத்தின் ஆதரவுடன் 1986 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்த விருதானது வேளாண் துறைக்கு வழங்கப்படும் நோபல் பரிசிற்குச் சமமானதாகக் கருதப்படுகின்றது.
  • இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அனுசரிக்கப்படும் ஐக்கிய நாடுகள் உலக உணவு தினத்தன்று (அக்டோபர் 16) வழங்கப்படுகின்றது
  • உலக உணவு விருது அமைப்பானது தற்பொழுது பார்பரா ஸ்டின்சன் என்பவரால் நிர்வகிக்கப் படுகின்றது.
  • இது பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் நோபல் அமைதிப் பரிசு பெற்றவரான நார்மன் போர்லாங் என்பவரால் கருத்துரு கொண்டு ஆரம்பிக்கப் பட்டது.
  • இந்த விருதின் முதலாவது வெற்றியாளர் 1987 ஆம் ஆண்டில் இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்