உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது இந்த விலைக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையினை இது மதிப்பிடுகிறது.
இது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகிய ஐந்து பொருட்களின் சராசரி விலைக் குறியீடுகளைக் கொண்டு உள்ளது.
ஆகஸ்ட் மாத விலை மதிப்பு ஆனது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைவான மதிப்பாகும்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எட்டப்பட்ட இதுவரை பதிவான அனைத்து உச்சத்தினையும் விட இது 24% குறைவாக உள்ளது.
இந்த ஆண்டு உலக தானிய உற்பத்தி 2.815 பில்லியன் டன்களாக இருக்கும் என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கணித்துள்ளது.
இது முந்தைய மதிப்பீட்டான 2.819 பில்லியனில் இருந்து சற்று குறைவாகும்.