TNPSC Thervupettagam

உலக உயிரி எரிபொருள் தினம் – ஆகஸ்ட் 10

August 12 , 2020 1507 days 493 0
  • இந்தத் தினமானது வழக்கமான படிம எரிபொருட்களுக்கு மாற்றாக படிமமற்ற எரிபொருட்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உயிரி எரிபொருட்கள் பொதுவாக சுற்றுச்சுழலுக்கு உகந்த வகையிலான பசுமை எரிபொருட்களாகும். இவற்றின் பயன்பாடு உலகளாவியப் பிரச்சினையான கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்துதலை மேற்கொள்கின்றது.
  • 1893 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று, சர் ரூடல்ப் டீசல் (டீசல் என்ஜினைக் கண்டுபிடித்தவர்) என்பவர் முதன்முறையாக நிலக்கடலை எண்ணெய்யின் உதவியுடன் இயந்திர என்ஜினை வெற்றிகரமாக இயக்கினார்.
  • எனவே இச்சாதனையைக் குறிப்பதற்காக, உலக உயிரி எரிபொருள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தியாவில், மத்திய அரசானது 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் தேசிய உயிரி எரிபொருட்கள் கொள்கை – 2018 என்பதற்கு ஒப்புதல் அளித்தது.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனால் கலப்பு மற்றும் 5% உயிரி எரிபொருள் கலப்பு ஆகிய இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்