TNPSC Thervupettagam

உலக உயிரி எரிபொருள் தினம் 2023 - ஆகஸ்ட் 10

August 12 , 2023 473 days 201 0
  • ஜெர்மனியைச் சேர்ந்த சர் ருடால்ப் டீசலின் ஆய்வுப் பரிசோதனைகளை கௌரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • 1892 ஆம் ஆண்டில் டீசல் எந்திரத்தின் உருவாக்கத்திற்கான காரணமாக இருந்தார்.
  • 1893 ஆம் ஆண்டில் கடலை எண்ணெயைக் கொண்டு இவர் அந்த இயந்திரத்தை இயக்கினார்.
  • அடுத்த நூற்றாண்டில் பல்வேறு இயந்திரங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் புதைபடிவ எரிபொருட்களுக்கு ஒரு மாற்றாகத் தாவர எண்ணெய் அமையப் போகிறது என்று அவரது ஆராய்ச்சி சோதனை கணித்துள்ளது.
  • உலக உயிரி எரிபொருள் தினமானது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தினால் 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
  • உயிரி எரிபொருள்களின் தேசியக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட 2018 ஆம் ஆண்டு திருத்தங்களில், 2030 ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனால்-கலவை மற்றும் 5% உயிரி எரி பொருள் கலவையை அடையும் இலக்கானது எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
  • உயிரி எரிபொருள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளாகும் என்ற நிலையில், அவற்றை வேளாண் கழிவுகள், மரங்கள், பயிர்கள் அல்லது புல் போன்ற உயிரியல் பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய இயலும்.
  • உயிரி எரிபொருள்களை மிகக் குறுகிய காலத்தில் தயாரித்து, திரவ அல்லது வாயு வடிவில் சேமிக்க முடியும்.
  • புதைபடிவ எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில், உயிரி எரிபொருள்கள் புதுப்பிக்கத் தக்கவை, நிலையானவை மற்றும் உயிரிச் சிதைவிற்கு உட்படக் கூடியவையாகும்.
  • உயிரி எரிபொருள் என்ற திட்டமானது, இந்தியாவில் தயாரித்தல், ஸ்வச் பாரத் மற்றும் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான இந்திய அரசின் முன்னெடுப்புகளுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
  • உயிரி எத்தனால், உயிரிடீசல், மேம்பட்ட உயிரி எரிபொருள்கள், இரண்டாம் தலைமுறை தொழில் நுட்பத்திலான (2ஜி) எத்தனால், புதைபடிவ எரிபொருளுக்கான பரிமாற்ற எரி பொருள்கள், ஆல்காவிலிருந்து உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை தொழில் நுட்பத்திலான (3ஜி) உயிரி எரிபொருள்கள், புதைபடிவ எரிபொருளுக்கான பரிமாற்ற எரிபொருள்கள் மற்றும் உயிரி ஒன்றிணைவு சார்ந்த எரிபொருள் போன்றவை இந்தியாவில் உள்ள முக்கியமான உயிரி எரிபொருள் வகைகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்