இது ஆண்டுதோறும் மார்ச் மாத சம இரவு தினம் அல்லது வட அரைக்கோளஇளவேனிற் கால சம இரவு தினத்திற்கு முந்தைய வெள்ளிக் கிழமையன்று அனுசரிக்கப் படுகின்றது.
இது உலக உறக்க சங்கத்தின் உலக உறக்க தினக் குழுவால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
முதலாவது உலக உறக்க தினமானது 2008 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று நிகழ்ந்தது.
2020 ஆம் ஆண்டின் கருத்துரு, 'சிறந்த உறக்கம், சிறந்த வாழ்க்கை, சிறந்த கிரகம்' என்பதாகும்.
இது பற்றி
மார்ச் மாத சம இரவு தினம் ஆனது வட அரைக்கோளத்தில் இளவேனிற் கால சம இரவு தினம் (வசந்தகால சம இரவு தினம்) என்றும் தெற்கில் இலையுதிர் கால சம இரவு தினம் என்றும் அழைக்கப்படுகின்றது.
மார்ச் மாத சம இரவு தினமானது வட அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குளிர்காலத்தின் முடிவையும் குறிக்கின்றது. ஆனால் இது தென் அரைக்கோளத்தில் இலையுதிர்க் காலத்தின் தொடக்கத்தையும் கோடையின் முடிவையும் குறிக்கின்றது.