இத்தினமானது உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இது உயிரைக் காப்பாற்றவும், அவசியம் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இறந்த பிறகு தங்கள் உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களைத் தானம் செய்வதற்கு உறுதியளிக்கவும் வேண்டி மக்களை ஊக்குவிக்கிறது.
இந்த நாள் 2005 ஆம் ஆண்டில் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டில் ரொனால்ட் லீ ஹெரிக் தனது சிறுநீரகத்தைத் தனது இரட்டையரான சகோதரருக்கு தானம் செய்த நிகழ்வு தான் முதல் உடல் உறுப்பு தானமாகும்.
இந்தியாவில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்த நபர் லலிதா ரகுராம் என்பவர் ஆவர்.
1994 ஆம் ஆண்டில், அவர் தனது கணவருக்குச் சிறுநீரகத்தைத் தானம் செய்ததன் மூலம் நாட்டில் பதிவான, உயிருள்ள நபர் செய்த முதலாவது உறுப்பு தானம் இதுவாகும்.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தன்னார்வத் தானம் செய்ய முன் வாருங்கள்; குறைபாடுகளை நிரப்புவதற்கு அதிக எண்ணிக்கையிலான உறுப்பு தானம் செய்பவர்கள் தேவை” என்பதாகும்.