“உலக உள்கட்டமைப்பு நெகிழ்திறன்: நெகிழ்திறன் ஈவினைக் கைப்பற்றுதல்” என்ற இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் அறிக்கையினை பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்புக் கூட்டணி (CDRI) வெளியிட்டுள்ளது.
பருவநிலை மாற்றமானது உள்கட்டமைப்புத் துறைகள் மற்றும் கட்டிடங்களின் மதிப்பில் 732 முதல் 845 பில்லியன் டாலர் வரையிலான மதிப்பிடப்பட்ட உலகளாவியச் சராசரி வருடாந்திர இழப்புகளுக்கு (AAL) வழிவகுக்கிறது.
அதாவது 2021-2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 14 சதவீத மதிப்பானது ஆபத்தில் உள்ளது.
இந்த அவசரச் செலவினத்தில் பாதி அளவானது குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளால் (LMIC) மேற்கொள்ளப்படுகிறது.
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் பேரிடர்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் உலகளாவிய சராசரி வருடாந்திர இழப்பு 301 முதல் 330 பில்லியன் டாலர் வரை உள்ளது.
உலகளாவிய உள்கட்டமைப்பின் சொத்து மதிப்பில் ஏறக்குறைய 67 சதவீதத்தினை அதிக வருமானம் கொண்ட நாடுகள் கொண்டுள்ளன.
அதிக மற்றும் குறைவான-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் முறையே 24.8 சதவீதம் மற்றும் 7.0 சதவீதத்தினைக் கொண்டுள்ளன.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் 0.6 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.
பருவநிலை மாற்றமானது அதிக வருமானம் உள்ள நாடுகளின் சராசரி வருடாந்திர இழப்பினை 11 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 12-22 சதவீதமும், குறைவான வருமானம் கொண்ட நாடுகளில் 33 சதவீதமும் அதிகரிக்கலாம் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.